வணக்கம். எல்லா அடியார்களுக்கும் ஒரு வேண்டுகோள். அடியார்கள் தினமும் பாராயணம் அல்லது சிவ பூஜை செய்த பிறகு, கீழே உள்ள மங்கள வாழ்த்து பிரார்த்தனையை சொல்லி முடியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மற்ற அடியார்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.
திருச்சிற்றம்பலம்.
*********************************************************************************************
அனாதி முழுமுதற் பெருங்கடவுளாகிய சிவபெருமான், எல்லா உயிர்களும் வழிபட்டு உய்யும் பொருட்டுத் திருமேனி தாங்கி எழுந்தருளி இருக்கும் திருக்கோவில்கள் அனைத்திலும், நித்திய நைமித்திய வழிபாடுகளெல்லாம் வேத சிவாகமப்படி சிறப்பாக நடந்து வரும் பொருட்டு திருவருள் புரிவீராக!
பூஜை இல்லாமல் நின்று போன அனைத்து கோவில்களும் மீண்டும் சுபிக்க்ஷம் பெற்று நித்திய நைமித்திய வழிபாடுகள் நடைபெற திருவருள் புரிவீராக !!!
உலக உயிர்கள் யாவும், எப்போதும் உம்மையே சிந்தையாகக் கொண்டு குரு, லிங்க, சங்கம பக்தியும், உயர் சிவஞானமும் கொண்டு, இன்புற்று வாழ திருவருள் புரிவீராக !!!
அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தவ நெறி தந்து திருவருள் புரிவீராக !!!
அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இறை உணர்வு உண்டாக்கி துணையாக இருந்து முக்தியை கொடுத்து திருவருள் புரிவீராக !!!
தென்னாட்டுடைய சிவனே போற்றி.!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
பராயத்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஏகவில்லவம் சிவார்ப்பணம் !
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🏻
*********************************************************************************************