Wednesday, January 17, 2024

மங்கள வாழ்த்து

 

வணக்கம். எல்லா அடியார்களுக்கும் ஒரு வேண்டுகோள். அடியார்கள் தினமும் பாராயணம் அல்லது சிவ பூஜை செய்த பிறகு, கீழே உள்ள மங்கள வாழ்த்து பிரார்த்தனையை சொல்லி முடியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மற்ற அடியார்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக்க நன்றி.

திருச்சிற்றம்பலம்.

*********************************************************************************************
அனாதி முழுமுதற் பெருங்கடவுளாகிய சிவபெருமான், எல்லா உயிர்களும் வழிபட்டு உய்யும் பொருட்டுத் திருமேனி தாங்கி எழுந்தருளி இருக்கும் திருக்கோவில்கள் அனைத்திலும், நித்திய நைமித்திய வழிபாடுகளெல்லாம் வேத சிவாகமப்படி சிறப்பாக நடந்து வரும் பொருட்டு திருவருள் புரிவீராக!

பூஜை இல்லாமல் நின்று போன அனைத்து கோவில்களும் மீண்டும் சுபிக்க்ஷம் பெற்று நித்திய நைமித்திய வழிபாடுகள் நடைபெற திருவருள் புரிவீராக !!!

உலக உயிர்கள் யாவும், எப்போதும் உம்மையே சிந்தையாகக் கொண்டு குரு, லிங்க, சங்கம பக்தியும், உயர் சிவஞானமும் கொண்டு, இன்புற்று வாழ திருவருள் புரிவீராக !!!

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தவ நெறி தந்து திருவருள் புரிவீராக !!!

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இறை உணர்வு உண்டாக்கி துணையாக இருந்து முக்தியை கொடுத்து திருவருள் புரிவீராக !!!

தென்னாட்டுடைய சிவனே போற்றி.!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
பராயத்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஏகவில்லவம் சிவார்ப்பணம் !
நற்றுணையாவது நமச்சிவாயவே
🙏🏻

 *********************************************************************************************

Tuesday, August 15, 2023

ஸநாதன தர்மம் - உண்மையும் போலிகளும்

  

சமயங்கள்

  ஸநாதன தர்மத்தின் அடிப்படை  சமயங்கள் ஆறு.

எண்

சமயம்  பெயர்

முதற் கடவுள்

1

காணபத்தியம்

ஸ்ரீ விநாயகர்

2

வைணவம்

ஸ்ரீ  திருமால்

3

கௌமாரம்

ஸ்ரீ முருகப் பெருமாள்

4

சௌரம்

சூரியன்

5

சாக்தம்

ஸ்ரீ  அம்பாள்

6

சைவம்

சிவபெருமான்

ஆறு சமயங்களுக்கும் பொதுவான அடிப்படைக் கொள்கைகளை கொண்டவை :-

  • பரம்பொருள் ஒன்றே.
  • வேதமே  அடிப்படையானவை.
  • பரம்பொருளின் அருளில் திளைத்தலே முக்தி
  • இன்னும் பல  

ஸநாதன தர்மத்தின் அடிப்படை :-

1. வேதங்கள் (ரிக், யசுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள், ஜோதிட சாஸ்திரங்கள்)

2. ஆகமங்கள் (சைவ ஆகமங்கள்-28 & வைணவ ஆகமங்கள்-2)

3. பதினெட்டு புராணங்கள்

4. இரண்டு இதிகாசங்கள் (இராமாயணம் & மகாபாரதம்)

5. பதினான்கு சித்தாந்த சாஸ்திரங்கள் 

6. உபநிஷத்துக்கள்

7. சைவ மற்றும் வைணவ சித்தாந்தங்கள்

8. பாராயண பாடல்கள்

     விநாயகர் அகவல்

     18,246  திருமுறை பாடல்கள்

     நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள்

     ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

     ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

     அபிராமி அந்தாதி  - 101 பாடல்கள்

     கந்தர் அந்தாதி - 102 பாடல்கள்

     கந்தர் அலங்காரம் - 108 பாடல்கள்

     கந்தரனுபூதி - 52 பாடல்கள்

     திருப்புகழ் - 1325 பாடல்கள்

     திருவகுப்பு - 25 பாடல்கள்

     சேவல் விருத்தம் - 11 பாடல்கள்

     மயில் விருத்தம் - 11 பாடல்கள்

     வேல் விருத்தம் - 11 பாடல்கள்

     திருவெழுகூற்றிருக்கை - 1

     கந்தர் சஷ்டி கவசம்

     கந்தர் குரு கவசம்

     வேல் மாறல்

     ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம்

     ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய 100 ஸ்தோத்ரங்கள்

     ஸ்ரீ ராமானுஜர்  அருளிய மூன்று கத்யங்கள்

(சரணாகதி கத்யம் , ஸ்ரீரங்க கத்யம்,  ஸ்ரீ வைகுண்ட கத்யம்)

     ஸ்ரீ மத்வாச்சாரியார் அருளிய  ஸ்தோத்ரங்கள்

     ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம்

      சிவஞான போதம்

      சிவபோகசாரம்

      சித்தர் பாடல்கள்

      உண்மை விளக்கம்

     மற்றும் பல எண்ணில் அடங்கா தோத்திரப் பாடல்கள் உள்ளன

மேலே உள்ள அனைத்தையும் அறிந்தவர்கள் நமது ஸநாதன தர்மத்தில் யாரும் இல்லை.

ஸநாதன தர்மத்தில் மிக முக்கியமானவை வேதங்கள்.

இவை இறைவனின் நாதத்தில் இருந்து தோன்றின.

வேதங்களை தவறாக உச்சரித்தால் அதன் பொருள் தவறாகி விடும், மேலும் உச்சரிப்பதற்கு ஷரங்கள் மிக முக்கியம்.

ஆதலால், பெருமான் எல்லா தரப்பு மக்களையும் ரக்ஷிப்பதற்காக நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் மற்றும் ரிஷிகளை பூலோகத்திற்கு வேண்டும் பொழுது அனுப்பி வேதத்தில் சொல்லி இருக்கிற அதே கருத்தை தமிழில் உள்ள ஆறு சமயங்கள் பாடல்களில் பாடச் செய்தார்.

 இதை உணர்த்தும் விதமாக, 

                         வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்கப்

  பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத

  சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்

  பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.!”

என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள், திருஞானசம்பந்தர் சுவாமிகள் அவதாரத்தை உணர்த்துகிறார்.

சைவ சமயம்

சமயங்கள் ஆறு என இருந்தாலும்,

உலகில் தொன்மையான சமயம் சைவ சமயம்.

சிவ வழிபாட்டைப் பற்றியும் சைவ சமயத்தைப் பற்றியும் பல வரலாறுகள் கூறுகின்றன.

எனினும், சைவம் தோன்றிய காலம் எப்போது என்பதை வரையறுத்துக் கூற இயலவில்லை.

தொன்மை காலந்தொட்டு சிவ வழிபாடு நிகழ்ந்தது என்பதற்கான வரலாற்றுத் தரவுகள் கிடைத்துள்ளன.

பழம்பெரும் நூலான தொல்காப்பியம் முதல் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, இன்னும் பல சங்ககால நூல்களிலும் சைவத்தை பற்றியும் அது கூறும் சிவபரம்பொருளை பற்றியும் காணலாம்.

வட மொழியில் உள்ள சவுந்தர்யலகரிக்கு உரை எழுதியுள்ள "சைவ எல்லப்ப நாவலர்",

சைவத்தின் மேல்சமயம் வேறு இல்லை அதில்சார் சிவமாம்

  தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்

  வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்

  உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே.!”

என்று பாடுகிறார்.

தற்பெருமைக்காகவோ, இறுமாப்பு கொண்டோ  அவர் பாடவில்லை.

ஏன் அவ்வாறு பாடினார்.?

 "எல்லாம் சிவத்தில் அடக்கம்.!”

அதனால் தான் சிவன் கோயில்களில் ஸ்ரீ அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர்,  ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ நவகிரஹங்கள், ஸ்ரீ அனுமார் இன்னும் பல தெய்வங்களையும் வழிபடலாம்.

 சைவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு மட்டும் இல்லாமல், உண்மை தத்துவங்கள் மூலமாக பரம்பொருளுக்கும் உயிர்களுக்குமான தொடர்பினை மிகத் தெளிவாக கூறுகிறது சைவ சித்தாந்தம்.

 பரம்பொருள் சக்தியின் (அருள் ஆற்றல்) மூலமாக, தானே பிரபஞ்சங்கள் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார்.  வேண்டும் பொழுது அனைத்தையும் தன்னோடு ஒடுக்கவும் செய்கிறார்.

ஏன்.?!

உயிர்கள் பக்குவத்திற்காக.!

ஜீவராசிகள் யாவும் தன்னைப் போலவே பேரானந்தத்தை அனுபவிக்க முக்திப்பேறு அடைய வேண்டும் என்ற கருணை.!

 சைவம் உரைப்பது, உணர்த்துவது "முப்பொருள் உண்மை".
முப்பொருள்கள் என்பன,

பதி      பதி ஒன்றே.!

பசு      பசுக்கள் பல.

பாசம்  - ஆணவம், கன்மம், மாயை (மும்மலங்கள்)

இந்த மூன்றும் அனாதிப் பொருட்கள். தோற்றமோ முடிவோ இல்லாதவை.
(
தோற்றம் இருந்தால் தானே முடிவு.!)

தாயுமானவர், "என்று நீ.! அன்று நான்.!" என்று எளியவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக பாடுகிறார்.

v  முப்பொருள்களுக்கும் ஒன்றுடன் ஒன்று என்ன தொடர்பு.?

v  பிறப்புக்கு முன் உயிர்களின் நிலை என்ன.?

v  உலகம் ஏன் தோன்றியது.? யார் தோற்றுவித்தார்.?

v  உலக சிற்றானந்தம் தான் உயிர்களுக்கு முழுமையான இன்பமா.?

v  இல்லை, பேரானந்தம் என்ற ஒன்று உள்ளதா.?

v  உண்டு எனில், அந்த பேரானந்தத்தை அடைவது எப்படி.?

v  பேரானந்தத்தை அடைந்த பின் உயிர்களின் நிலை என்ன.?

என பலவாறான நிலைகளுக்கும் அனுபவ பூர்வமாக, மெய்ஞானத்தினால் நம் குருமார்களும் அருளாளர்களும் உணர்ந்து, நமக்காக 12 திருமுறைகளாகவும்,

14 சாத்திரங்களாகவும், இன்னும் பல அற்புத நூல்களாகவும் அருளி உள்ளார்கள்.

முப்பொருள் உண்மை

பதி

பரம்பொருள் ஒருவனே.!
அவன் பேராந்த முக்தி அருளும் கருணை சொரூபி.!

எல்லாவற்றையும் கடந்து இருக்கும் பெருமான், இந்த நிறம், இன்ன வடிவம், இன்ன பெயர் என வரையறுக்க முடியாதவன். அவனை "சிவன்" என்கிறது சைவம்.

அவன் எண்குணத்தான்,

1. தன்வயத்தன் ஆதல்                           5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

2. தூய உடம்பினன் ஆதல்                   6. பேரருள் உடைமை

3. இயற்கை உணர்வினன் ஆதல்     7. முடிவு-இல் ஆற்றல் உடைமை

4. முற்றும் உணர்தல்                              8. வரம்பு-இல் இன்பம் உடைமை

இதை,

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

              தாளை வணங்காத் தலை.!”

என்று திருவள்ளுவ நாயனார் பாடுகிறார்.

பெருமான் ஏகன்.! அவனே அனேகன்.!

        ஏகன் என்றால்:- பரம்பொருள் ஒருவனே.!

        அனேகன் என்றால்:- எங்கும் வியாபகமான பெருமான், எல்லா உயிர்களிலும் கலந்து, பஞ்சபூத கலப்பால் ஆன எல்லா பொருள்களிலும் கலந்து இயக்குகிறான்.

அப்பதியான பெருமானை எந்த பெயரை சொல்லி அழைத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். நாம் ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கிறோம்.

இதை, "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை"

என்று திருநாவுக்கரசர் சுவாமிகள் (அப்பர்) பாடுகிறார்.    

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
 
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.!

என்று பாடுகிறார் மாணிக்கவாசகர் சுவாமிகள்.

உயிர்களும் தன்னைப் போலவே எண்குணத்தால் பேரானந்தத்தை பெற வேண்டும் என்று கருணை கொண்டு, உயிர்களுக்காக அவன் தன் சொரூபத்திலிருந்து, இறங்கி வரும் நிலையில் அவன் "பதி".

பசு

பசுக்கள் பல.!
பதியாகிய பெருமான், 84 லட்சம் யோனி பேதங்களில் (ஜீவன்கள்) ஒன்றாய், உடனாய் மற்றும் வேறாய் இருந்து இயக்குகிறார் என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்  :-

உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரமாம் யோனி பேதம்
 
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிராய், அங்கங்கே நின்றான் கோயில்

 84 லட்சம் யோனி பேதங்கள் :-

எண்

யோனி  வகையின் பெயர்

மொத்தம்

1

தாவரங்கள் - Plant category

20  லட்சங்கள்

2

தேவர்கள் - Devargal

14  லட்சங்கள்

3

ஊர்வனைகள் - Reptile category

11  லட்சங்கள்

4

நீர்வாழ்வனைகள் - Aquatic category

10   லட்சங்கள்

5

பறப்பனைகள்  - Flying category

10   லட்சங்கள்

6

நடப்பனைகள் - Walking category

10  லட்சங்கள்

7

மானிடர்கள் -  Human being

9   லட்சங்கள்

 

மொத்தம்

84 லட்சங்கள்

பசுவாகிய உயிர்கள் அன்பானது, அறிவித்தால் அறியும் தன்மை கொண்டது.

பாசம்

ஆணவம் என்பது யான், எனது என்னும் மயக்கம்.

உயிருடன் என்றும் நீங்காமல் இருப்பது, இதை சகஜ மலம் என்பார்கள் பெரியோர்.

 உயிர் பிறப்பு எடுப்பதற்கு முன், உயிரின் அறிவாற்றலை மறைக்கிறது.

உயிர் பிறப்பெடுத்த பின், உயிரின் அறிவாற்றலை கீழ் படுத்துகிறது.

உயிர் முக்தி அடைந்த பின், தன் ஆற்றல் இழந்து ஒடுங்கி கிடக்கிறது.

கன்மம் என்பது வினை.

"எல்லாம் விதி" என்று நாம் இயல்பாய் சொல்லும் "விதி"யை சைவ சித்தாந்தம்

"வினை" என்கிறது. உயிர்கள் எடுக்கும் பிறவிகளுக்கு காரணம் வினை.

மூவகை வினைகள்:

v  தொல்வினை (சஞ்சிதம்)

        பல பிறவிகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள வினைத் தொகுப்பு.

v  ஊழ்வினை (பிராரத்தம்)

        இப்பிறவியில் இறைவனால் ஊட்டப் படுகின்ற வினை.

v  வருவினை (ஆகாமியம்)

        ஊழ்வினையை அனுபவிக்கும் போது, அதனால் மேலும் சேர்க்கும் வினை.

 அறம்:- இதனால் வருவது நல்வினை - அதனால் இன்பம்.

பாவம்:- இதனால் வருவது தீவினை - அதனால் துன்பம்.

 நல்வினை, தீவினை இரண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் என்கிறது சைவசித்தாந்தம். ஒன்று தங்க சங்கலி. மற்ற ஒன்று இரும்பு சங்கலி.

மாயை என்பது உலகப் பொருட்களும் அதன் அனுபவமும்.

தனு, கரண, புவன போகங்கள் எல்லாம் மாயையிலிருந்து தோன்றுபவை.

 தனு – உடல்

கரணம் - மனம் முதலான உட்கருவிகள்

புவனம் - உடலுக்கு ஆதாரமாகிய உலகம்

போகம் - அனுபவிக்கப்படும் பொருள்

 மாயை என்பது மயக்கம் தருவது அல்ல, விளக்கம் தருவது என்பது நம் கொள்கை.

முப்பொருள் தொடர்பு

பதி ஆகிய பெருமான், அறிவே மயமானவன்.

பசு ஆகிய உயிர், அறிவித்தால் அறிவது.

பாசம் ஆகிய மலம், சடம்‌.

எனவே, சடமாகிய பாசம் பதியை அறியாது.

பதியாகிய பெருமான் எல்லாம் கடந்தவன், எண்குணத்தான்.

எனவே, அவன் பாசத்தை அறிய வேண்டிய அவசியம் இல்லை, பாசம் அவனை நெருங்காது.

ஆனால், பசுக்களாகிய உயிர்கள் ஆணவ மலத்தினால் தான் யார், தன் நிலை என்ன என எதுவும் உணராமல் கட்டுண்டு கிடந்தன.

அன்பு எனும் குணம் கொண்ட, அறிவித்தால் அறியும் உயிரும், தன்னைப் போலவே பேரானந்தம் எனும் உயரிய முக்தி நிலையை அடைய பெருமான் கருணை கொள்கிறான்.

வினைக்கு ஏற்ப பிறப்புகளை கொடுத்து, பிறப்புக்கு அடிப்படையான தனு, கரண, புவன, போகங்களை கூட்டுவித்து, நிலையில்லாதவற்றை உயிர்கள் உணர உடனிருந்து உணர்த்துகிறான் பெருமான்.

பெருமான் உணர்த்தும் நிலையை உயிர்கள் மெய் அன்பால், மெய் ஞானத்தால் உணரும் போது, பெருமானையும் உணர்கின்றன, அவன் கருணையையும் உணர்கின்றன.

அந்த நிலையில் உயிர்களின் ஆணவ மலம் ஒடுக்கப்பட்டு, நிலையான பேரின்பமான முக்தி இன்பத்தை அனுபவிக்கச் செய்கிறான் பெருமான்.

தன் திருவடி நிழலில் உயிர்களை இளைப்பாறுமாறு செய்து பேரானந்தத்தைத் தருகிறான் பெருமான்.

இதனை மெய்ஞானத்தினால் உணர்ந்த திருமூல நாயனார்,

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்

  பதியினைப் போல் பசு பாசம் அனாதி

  பதியினைச் சென்றுஅணு காப்பசு பாசம்

  பதி அணுகில் பசு பாசம் நிலாவே.!”
என்று பாடுகிறார்.

 பக்குவம் அடையாமல் உயிருக்கு இந்த பேரானந்தத்தை பெருமான் உடனே கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால், பக்குவம் இன்மையால் அந்த ஆனந்தத்தை உயிர் அனுபவிக்காது. (ஆணவத்தால் கட்டுண்ட உயிரின் தன்மை இது)

 முதலில் ஆரம்ப வகுப்பில் தொடங்கி படிப்படியாக கல்வி கற்க ஆரம்பித்து தான் முனைவர் இறுதியாக ஆக முடியும். அது போல..

 முப்பொருள்கள் பற்றிய ஆராய்ச்சியை நான்கு வகைகளில் வைத்து சைவசித்தாந்தம் கூறுகிறது.

v  பிரமாணம்

v  இலக்கணம்

v  சாதனம்

v  பயன்

பிரமாணம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களையும் "உள்ள பொருள்" என ஞான குருவினால் துணிந்து அறிதல்.

இலக்கணம் முப்பொருள்களின் இயல்புகளை குருவினால் அறிதல்.

சாதனம் முப்பொருள்களில் பயனைப் பெறுவது, அதனைப் பெறுதற்கு உரிய வழி, அவ்வழியில் முயலும் முறைகளை குருவினால் உணர்தல்.

பயன் பயனைப் பெறுவதற்குரிய வழியில் முயன்ற பின்னர், அம்முயற்சியால் அடையும் பயன்களை குருவினால் உணர்தல்.

 இவற்றை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் முறையில் ஞான குருவின் அருளோடு பெறுதல் முறை என்கிறது சைவசித்தாந்தம்.

குருவே சிவம்

 "குருவே சிவம்" இதன் உண்மைப் பொருள் புரிகிறதா.?

புரிந்தால் குருவின் மகத்துவமும், முக்கியத்துவமும் நமக்கு தெளிவுபடும்.

குருமார்கள் மூன்று வகை ஆவர், வித்தியா குரு, கிரியா குரு, ஞான குரு.

வித்தியா குரு ஞானநூல்களை கற்றுத் தருபவர்.

கிரியா குரு சிவபூஜை உள்ளிட்ட முறைகளை கற்றுத் தருபவர்.

ஞான குரு சிவப் பரம்பொருளிடம் நம்மை சேர்த்து உண்மை ஞானத்தை உணர்த்துபவர்.

இப்படியாக நமக்கு கிடைக்கப் பெற்ற குருவின் உடலில் சிவமே ஆவேசித்து நமக்கு அருள்வார்.

குருவை நாம் சிவமாக பாவிப்போம். ஆனால் குருவுக்கு, தான் சிவம் என்ற எண்ணம் இருக்காது, இருந்தால் அவர் குரு அல்ல.

பெருமான் குருவாக வரும் வரை தினமும் நம்மை நாம் தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். (சிவ பூஜை, பாராயணங்கள், சொற்பொழிவு கேட்பது, கோயில் உழவார பணிகள்)

நால்வர் பெருமக்கள், நாயன்மார்கள், சந்தானக் குரவர்கள் என நமக்கு பல அருளார்களை பெருமான் குருவாக தந்துள்ளார்.
நமக்கான குரு (உண்மையான குரு) வரும் வரை இவர்களை மானசீகமாக நம் குருவாக ஏற்கலாம்.

என்றுமே (எப்பொழுதும்)  இவர் தான் குரு  என்று ஒருவரை நாம் தேடி செல்ல கூடாது. அப்படி சென்றால் போலி குருவிடம் மாட்டி ருத்த பட வேண்டி இருக்கும்.

யோகத்தினால் உடல் நலத்துடன் இருக்க முடியுமே தவிர, அதனால் மெய்யான ஞானத்தை உணரவோ, அடையவோ முடியாது. முடியும் என்பவர் போலி குரு.

போலி மார்க்கம், போலி குரு, யோக குரு, தவறான போதனை தரும் ஆசாமிகளிடத்தில் பக்தியாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்

 திருமூலர்  அருளிய திருமந்திரம் பாடல் :-

                                                குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

  குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

  குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

  குருடுங் குருடுங் குழிவிழு மாறே.!”

சிஷ்யனும் ஏதும் அறியா குருடன். அவன் பின்பற்றும் குருவும் ஏதும் அறியா குருடன். இருவருமே கருத்துக் குருடர்கள். இந்த இரண்டு குருடுகளும் ஒன்றாகி ஒருவருக்கொருவர் வழி காட்டினால் முடிவில் தவறான பாதைக்கு சென்று வீழ்ந்து அழிவர் என்று முக்காலமும் உணர்ந்த திருமூலர் அருளி உள்ளார்.

கலியுகத்தில் இது மாதிரி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான், குருஞான சம்பந்தர்  சுவாமிகள் சிவபோகசாரத்தில்  இவ்வாறு பாடினாரோ  என்று எண்ணத் தோன்றுகிறது.

தன்னை அறியார் தலைவன் தனை அறியார்

  முன்னை வினையின் முடிவு அறியார் பின்னைக்

  குருக்கள் என்றும் பேரிட்டுக் கொள்ளுவார்கள் ஐயோ

  தெருக்கள் தனிலே சிலர்.!”

போலிகள்

1.        ஒரு அவதார வடிவத்தை வைத்து பல கோவில் கட்டுவார்கள். ஆனால் மற்ற அவதாரத்தையும் மற்றும் தெய்வங்களையும்  நிந்தை செய்வார்கள். அது மட்டும் இல்லாமல், முப்பத்தி முக்கோடி தேவர்களையும் நிந்தனை செய்வார்கள்.

தெய்வ நிந்தனை செய்தால் என்ன ஆகும் என்று குரு சொல்லி தராததால்

தெய்வ மற்றும் குரு நிந்தனை தொடர்ந்து செய்கிறார்கள்.

சிவநேசன் என்கிற சிவ பக்தர், மஹா விஷ்ணுவை குரு எவ்வளவு சொல்லியும் நிந்தனை செய்ததால் , சிவபெருமான் சிவநேசனை பாம்பாக போகுமாறு சாபம் விடுத்தார்.

எந்த தெய்வத்தை நிந்தனை செய்தாரோ, அடுத்த பிறவியில் மஹா விஷ்ணுவின் சிறந்த  பக்தனாக பிறந்து சித்தர்களில் காகபுஜண்டர் என்ற நிலையை பெற்று விளங்குகிறார்.

https://temple.dinamalar.com/news_detail.php?id=732

       குருவை  நிந்தனை செய்தால் , மறுபிறப்பு மட்டும் எடுக்காமல் தவறான குருவிடம் மாட்டி கொள்ள நேரிடும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம்,

https://jayasreesaranathan.blogspot.com/2018/08/karunanidhi-why-he-was-way-he-was.html?m=1

       பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இவ்வாறு திருவாய்மொழியில் பாடி உள்ளார் :-

                        அவரவர் தமதமது அறிவறி வகைவகை

             அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்

 அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

             அவரவர் விதிவழி அடைய நின்றனரே.”

     இப்படி எல்லாம் பாடிய ஆழ்வார்களின் பாசுரங்களை பின் பற்றாமல், புதிய மார்கத்தை பின் பற்றுவது வருத்தம் அளிக்கிறது.

வேதத்தை நன்கு படித்தவர்கள் நல்லெண்ணத்தில் எவ்வளவு எடுத்துக் கூறினாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்றும் அந்த முயல் மிகச் சிறப்பாக பல நாடுகளில்  இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். இதைக் கேட்டுவிட்டு  படித்தவர்கள் மீண்டும் வந்து எப்படி சொல்லுவார்கள்.

 2.        இரண்டாம் வகை கொஞ்சம் வினோதம். சிவன் கோவிலை கட்டுவார்கள். ஆனால் அந்த சிவனுக்கு விபூதி கூட இருக்காது.

"நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்ல" என்று பாடினார் ளவையார்.

திருநீறு மற்றும் ருத்ராக்ஷம் என்பது சிவபெருமானின் மிக முக்கியமான அம்சங்கள். கோவில் கட்டியவர்கள் மிக அதிகாரத்துடன் மற்றும் செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.  இதிகாச புராணங்களை படிக்காமல் அவதார தெய்வங்களை நிந்தனையும் செய்வார்கள்.

        புரட்டாசி மாசம் மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்க தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள். 

(திருவண்ணாமலை அண்ணாமலையாரே வல்லாள மஹாராஜாவிற்கு ஒவ்வொரு  வருடமும்  மாசி மாதம்   மக நட்சத்திரத்தில்  ஸ்ரார்த்தம் கொடுத்து அதன் முக்கியத்தை நமக்கு உணர்த்துகிறார்)

3.        மூன்றாம் வகை. கொஞ்சம் வித்தியாசமானது. இடத்திற்கு ஏற்ப தங்களுது பிரச்சாரத்தை மாற்றி செய்வார்கள். மார்க்கத்தை பின்பற்றும் மக்களுக்கு சுத்தமாக ஒன்றும் தெரியாது. ஆந்திராவிலும் தமிழ் நாட்டிலும் பலர் 35 வருடங்களுக்கு மேலாக பின் பற்றுகிறார்கள்.

மூன்று வகைகளுக்கும் ஒற்றுமை  உண்டு  "நாங்கள் பின்பற்றும் மார்க்கம் கிறிஸ்துவ மதமும் அல்ல இந்து மதமும் அல்ல இஸ்லாமிய மதமும் அல்ல."  என்று Secular ஆக இருப்பார்கள்.

நீயே கடவுள், அதை நீ உணரும் போது நீயும் கடவுளே என்பார்கள்

இந்த மூன்று வகைகளும் ஓரு மறைத்தலில் தான் இருக்கிறார்கள். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எப்படி காசியில் பிறந்த இந்து மதத்தில் இருக்கும் நாத்திகர்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் கங்கை என்கிற புனிதமான நதி வழியாக தினமும் சென்று வருவார்கள். ஆனால் மனதாராக நினைத்து கங்கையில் குளித்தால் தங்களுது பாவங்கள் தீர்ந்து வீடும் என்கிற உணர்வு இல்லாமல் எப்படி இறைவன் வைத்தாரோ, அதே மாதிரி தான் இவர்களுக்கும்.

யாரை வழிபாடு செய்வது?

 எந்த தெய்வத்தை வழிபாடு செய்வது என்கிற குழப்பம் நமக்கு இருக்கிறது. முன் சொன்ன ஆறு சமயங்களில், உங்கள் ஆன்மா யார் மீது பற்று கொண்டு செல்லுகிறதோ, அந்த தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

        சைவராக பிறந்த  திருமழிசை ஆழ்வார் திருமால் மீது  பற்று கொண்டு வைணத்தை பின் பற்றினார்.

        வைணத்தில் பிறந்தவர் புருடோத்தமநம்பி அடிகளார்  சிவபெருமான் மீது பற்று கொண்டு சைவத்தை பின் பற்றி 9 ஆம் திருமுறை பாடலை பாடி அருள் பெற்றவர்.

        கஞ்சனூர் அரதத்தர்  வைணவ குடும்பத்தில் பிறந்து, சிவபெருமான் மேல் பற்று கொண்டு கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல் நந்தியை புல் சாப்பிட வைத்து அதிசயம் செய்தவர்.

தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே.!

பல தெய்வ வழிபாடு நம் முதல் நிலை.
மனம் செம்மை ஆகும், உலகியல் பயன்களைப் பெறலாம்.

தெய்வங்கள் எல்லாம் பக்குவ ஆன்மாக்கள்.
பெருமானின் அருளால் அவர்கள் தெய்வநிலையை பெற்றவர்கள்.

இதை உணர்வது அவசியம்.

நீங்கள் எந்த சமயத்தை பின் பற்றினாலும், அந்த சமயத்தின் தெய்வத்துக்கு ஆற்றலை கொடுத்து ஒன்றாய், உடனாய், வேறாய் இருந்து இயக்குபவர் ஒரே பரம்பொருளாகிய ஈசன் ( ஜீவன்களை இயக்குகிற மாதிரி).

நம் முன்வினை பயன் காரணமாக, "எல்லாம் சிவன் செயல்", "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்ற உண்மை விளங்கும்.

இதற்கு "அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற முதுமொழியே சான்று.

 பாரதத்தில் ஸநாதன தர்மம் அடைந்த இன்னல்கள்

 1.       84 லட்சங்கள் யோனி பேதங்களில் இருக்கும் பரம்பொருள் என்று பாடிய திருஞானசம்பந்தர் சுவாமிகள், சமணர்களோடு அனல் வாதம் மற்றும் புனல் வாதம் செய்து பல ஸ்தலங்களை சமணர்களிடம் இருந்து மீட்டார். 

எண்

வாதம் வகை

குறிப்பு

1

அனல் வாதம்

பாடிய பாட்டை நெருப்பில் போட்டு

எரியாமல்  இருந்து வெல்வது

2

புனல் வாதம்

பாடிய பாட்டை ஆற்றின் நீரில் விட்டு எதிர் திசையை நோக்கி செல்ல வைத்து வெல்வது

 


 

அப்படி மீட்ட கோவில்களில் உள்ள ஊர்கள் எல்லாம் "பள்ளி"  என்று இருந்தன .  அதே பள்ளி என்ற அடைமொழியோடு இருக்கட்டும். பிற்காலங்களில் வரும் அன்பர்களுக்கு இது தெரிய வேண்டும் என்று பணித்தார் திருஞானசம்பந்தர் சுவாமிகள்.

அப்படி மீட்ட ஊர்கள்  தான் கீழே உள்ளவை :-

1. மகேந்திரப்பள்ளி, நாகப்பட்டினம்         4. திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்

2. அகஸ்தியன்பள்ளி, நாகப்பட்டினம்      5. திருப்பள்ளி , திருவாரூர்

3. சக்கரப்பள்ளி, தஞ்சாவூர்                            6. திருச்சிராப்பள்ளி

 குறைந்தபட்சமாவது, இந்த ஊர்களில் வாழுகின்ற  எத்தனை பேருக்கு தெரியும் இந்த  வரலாறு.?

அந்த சமணர்களிலும் பரம்பொருள் இருந்து இயக்குகிறது என்று தெரிந்த திருஞானசம்பந்தர் சுவாமிகள், அதனால் வாதம் செய்யாமல் சும்மா சென்று விட வில்லை. வாதிட்டு சைவத்தை நிலை நாடினார் மற்றும் கூன் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனையும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்.

அதே போல்  தான்  திருநாவுக்கரசரும், சமணர்கள் கொடுத்த பல துன்பங்களை பற்றி கவலை படாமல்,  சைவத்தை நிலை நாட்டியும்  மற்றும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனையும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மன்னன், பாடலி புத்திரத்திலிருந்த பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து திருவதிகையில் `குணபரஈச்சரம்` என்ற பெயரில் திருக்கோயில் எடுப்பித்தான்.

2.    பிஜப்பூர் சுல்தான் படைகள் சிதம்பரம் கோவிலை சூறையாடினர்.
ஸ்ரீ நடராஜர் மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் கீழே உள்ள மர பெட்டியில் நம் முன்னோர்கள் மதுரை மற்றும் குடுமியான்மலைக்கு பாதுகாப்பிற்காக எடுத்து சென்றனர்.

https://twitter.com/tskrishnan/status/1681835831152218117?t=G5RBZyEu14vbDbZ9x6vxnw&s=19 

 



Photo Credit: From Shri. T.S.Krishnan in Twitter Handle  @tskrishnan

 

3. உலுக்கான்  என்கிற முகம்மது பின் துக்ளக் தனது இஸ்லாமிய படையெடுப்பின்  மூலம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலை சூறையாடினான். 12,000 அப்பாவி மக்கள் மாண்டு போனார்கள். சுமார்  45 வருடங்கள் (1323 - 1371)  ஸ்ரீரங்கத்தில் இல்லாமல் ஆச்சாரியர்கள் நம்பெருமாளை பாதுகாப்பிற்காக எடுத்து சென்றனர். 

https://twitter.com/tskrishnan/status/1663801305566150656?t=hAbGYwm5T4rPJo2dSMMJJA&s=19


https://twitter.com/tskrishnan/status/1504275874337607680?t=P_3oYW2ruvM1YbMCCZMLXA&s=19


Photo Credit: From Shri. T.S.Krishnan in Twitter Handle  @tskrishnan

 4.       மாலிக் கஃபூர் மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் கோவிலை சூறையாடினான். 

 5.       இஸ்லாமிய படையெடுப்பில் தமிழகத்தில் பல கோவில்கள்  இன்னல்களுக்கு ஆளாயின. 

6.       பாரதத்தில்  caste system திணிக்கப்பட்டு  ஸநாதன தர்மத்தின்  ஆணி வேறாகிய  வர்ணாஸ்ரம தர்மம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது ஆங்கிலேயர் ஆட்சியில் தான். 

7.       திரு.சச்சிதானதந்தம் (Twitter)  மற்றும் திரு.கிச்சா  (Twitter) அவர்களின் மிக அருமையாக இங்கே எடுத்து உரைக்கிறார்கள்  :-

       வர்ணாஸ்ரம தர்மமும், திராவிட அதர்மமும் Part 1

https://www.youtube.com/watch?v=EGMTT3tFz34

வர்ணாஸ்ரம தர்மமும், திராவிட அதர்மமும் Part 2

https://www.youtube.com/watch?v=EuumLrl-91Y

 

8.        வலையப்பட்டி கிருஷ்ணன் அவர்கள் அவிநாசி பாளையம் சொற்பொழிவில் 2016 ஆம் ஆண்டு இந்த அற்புத தகவலை சொன்னார்கள். இரண்டாம் நூற்றாண்டில் இன்றைய பாகிஸ்தானில் அப்போட்டாபாத் (Abbottabad)  நகரின் உண்மையான பெயர் குமார ஸ்தானம். மிகப் பெரிய முருகன் கோவில் இருந்ததாக சொன்னார். காலசுழற்சியில் கோவிலும் அழிந்து போயின. ( அப்போட்டாபாத் ஊரில் தான் ஒசாமா பின்லேடன் மறைந்த ஊர் )

9.        இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் கணக்கில் அடங்கா பல இன்னல்களை நம் பாரத தேசம் கண்டு உள்ளது.

       இப்படி எல்லாம் கஷ்டபட்டு பாரதத்தில் ஸநாதன தர்மத்தை நிலை நாட்டிய நம் முன்னோர்கள், நமக்கு  ஒரு புரிதலும் இல்லாமல் தவறான சமய மார்கத்தையும்  மற்றும் தவறான குருவையும் நோக்கி செல்வபவர்களை பார்க்கும் பொழுது மிக வேதனையாக இருக்கிறது.

முடிவுரை

இது வரை இந்த பதிவை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் பொறுமையும் ஆன்மீக தேடுதலையும் கண்டு அடியேன் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன்.

யாரையும் குறை சொல்வதற்காகவோ துன்பப்படுத்துவதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல இது.

நமது சனாதன தர்மத்தில் உள்ள உண்மை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று கருத்தில் கொண்டு எழுதப்பட்ட நீண்ட பதிவு.

எப்படி ஸ்ரீ அனுமார் இலங்கையில் ஸ்ரீ சீதாபிராட்டியாரை தேடி சென்ற பொழுது அரக்கிகளை காணும் போது, தான் செல்லுகின்ற வழி சரியானதா என்று தன்னை தானே மனதில் சுய பரிசோதனை (introspect) செய்து கொண்டார்.  வாயு புத்திரனும்  மற்றும் பஞ்ச பூதங்களை வென்று இலங்கைக்கு சென்ற ஸ்ரீ அனுமாரே தனக்கு தானே சுய பரிசோதனை செய்யும் பொழுது, நாம் வழிபாடு செய்கின்ற மார்க்கம் புராதான வேத முறையை பின்பற்றுகிறதா,  சரியானதா அல்லது தவறானதா என்று நாமும் சுய பரிசோதனை செய்தால் சிறப்பு என்று நினைக்கிறேன்.

கடந்த காலம் நடந்து முடிந்து விட்டது. அதை பற்றி வருத்தம் அடையாமல் வருகின்ற காலத்திலாவது, அனைவரும்  நமது புராதன வழிபாட்டு முறையை  பின்பற்ற வேண்டும் என்பது தான் என் ஆசை.

அனைவருக்கும் இறைவன் திருவருளால் எல்லாம் நன்மையே நடக்க வேண்டும் என்று நம் எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்தனை செய்கிறேன்.

மிக்க நன்றி.

திருச்சிற்றம்பலம்